சிறப்பு வலைப்பதிவுகள்
சனி, 18 ஜூன், 2011
புற்றுநோயை விரட்டும் காபி
புதன், 25 மே, 2011
அழுகை
கண்ணீர் விடுவது கண்களுக்கு நல்லது
உலகம் முழுவதும் பெண்களுக்கு தெரிந்த விஷயம்தான். இருந்தாலும் இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு. ஆம். பெண்கள் அழுவதற்கான காரணங்களில் முதலிடம் வகிப்பது ஆண்களே.
லண்டனில் கண் பாதுகாப்பு நிறுவனம் ஒன்றின் சார்பில் 2,000 ஆண், பெண்களிடம் (அழுகை வரும் அளவுக்கு) ஆய்வு நடத்தப்பட்டது. அதில் தங்களை அழ விடுவதில் ஆண்கள் முதலிடம் வகிப்பதாக 4ல் 1 பெண் தெரிவித்தார். அதிலும், ஒருவர்கூட தனது அப்பா, மகனை காரணமாக கூறவில்லை! ஆய்வில் பங்கேற்ற அனைத்து பெண்களின் ஏகோபித்த குற்றச்சாட்டு… கணவன் அல்லது காதலன் மீதுதான். மனைவியோ, காதலியோ… அழ விட்டுப் பார்ப்பதில் ஆணுக்கு தனி ஆர்வம் இருப்பதாக வெடித்தனர் பெண்கள்.
ஆய்வின்படி, மனைவி, காதலி மட்டுமின்றி தாயைக் கூட அழவிடும் ஆண்கள் 63 சதவீதம் என்று தெரிய வந்தது. இப்படிச் செய்யும் ஆண்கள் தப்பி விட முடியுமா என்ன…? அவர்கள் ஆபீசில் பாஸ் கடிக்கும்போதும், வேலையைச் சுமத்தும்போதும் அழுகின்றனராம். இங்கிலாந்து பெண்களில் 32 சதவீதத்தினரும், ஆண்கள் 22 சதவீதத்தினரும் வேலையில் மனஅழுத்தம், பிரச்னையால் கண்ணீர் விட்டுக் கதறுகின்றனர்.
கடந்த 6 மாதங்களில் ஒருமுறையாவது அழுததாக ஆய்வில் பங்கேற்ற பலர் தெரிவித்தனர். எனினும், அலுவலக பிரச்னைகள், டென்ஷனால் கண்ணீர் விட்டு அழும் ஆண்கள் குறைவே. மற்றபடி மனதுக்குள் அழுதாலும், பெண்களால் என்ன பிரச்னை வந்தாலும் மனதுக்குள் கூட அழுவதில்லை. ஸ்டிராங்காக எதிர்கொள்கின்றனர். மாறாக, பெண்களை டென்ஷனாக்கி அழ விடுகின்றனர் என்கிறார் ஆய்வு நடத்திய டாக்டர் சாரா ப்ரூவர்.
அழுவது சோகமானதுதான் என்றாலும், கண்ணீர் விடுவது கண்களுக்கு நல்லது என்கிறார் அவர்.நவீன உலகில் பெரும்பாலான நேரத்தை கம்ப்யூட்டர் முன் கழிக்கிறோம். அதனால், கண்கள் காய்ந்து ஈரத்தன்மையை இழக்கின்றன. கண்ணீர் வெளியானால் கண்கள் சுத்தமாகும் என்றார் சாரா.
சாரே… பொஞ்சாதி, கேர்ள் பிரண்ட அழ விடுறதே அவங்க கண்கள் நல்லா இருக்கணுங்கற நல்ல நோக்கத்துலதான்னு அவங்க புரிஞ்சிக்கணும் தானே சாரே… என்கிறார் தினமும் மனைவியை அழ விடும் ஒரு கணவர்சனி, 14 மே, 2011
பணத்திற்கு பட்டை நாமம் போட்ட வாக்காளர்கள்
தமிழகத்தில் தேர்தல் என்றால், கோடி கோடியாய் பணத்தைக் கொட்டி இறைப்பது வாடிக்கையாகி விட்டது. ஜனநாயகத்தை, பணநாயகத்தால் வெல்ல முடியும் என்பது, திருமங்கலம் இடைத்தேர்தலின் போது, தி.மு.க.,வால், உறுதிபடுத்தப்பட்டது. அந்த தேர்தலில், தி.மு.க., கோடி கோடியாக பணத்தைக் கொட்டியது. இதற்கு நல்ல பலன் கிடைத்ததால், அதைத் தொடர்ந்து நடந்த, மதுரை மேற்கு, மதுரை மத்திய தொகுதிகளில், இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டது. அதன் மூலம், தி.மு.க., அடுத்தடுத்து வெற்றிகளையும் ஈட்டியது.சட்டசபை தேர்தலிலும், இந்த நடைமுறையை பின்பற்ற முயற்சிகள் நடந்தன. ஆனால், தேர்தல் கமிஷன் இதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில், பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. எப்போதும் இல்லாத வகையில், தேர்தல் செலவு கணக்குகளை பார்வையிட, மத்திய கலால் துறை அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகளின் கீழ் பறக்கும் படை, வீடியோ குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்த குழு, சுற்றிச் சுற்றி வந்ததன் மூலம், பண பட்டுவாடா ஓரளவு கட்டுக்குள் வந்தது.
இந்த கிடுக்கிப்பிடிகளை எல்லாம் மீறி, தமிழகம் முழுவதும், பல வழிகளில், தி.மு.க., தாராளமாக பணத்தை செலவு செய்தது. ஒரு தொகுதிக்கு, கட்சி சார்பில் மூன்று கோடி ரூபாயும், வேட்பாளர்கள் சார்பில் பல கோடி ரூபாய் என, பட்டுவாடாவும் நடந்தது."அவர்கள் வியர்வை சிந்தி உழைத்த பணத்தையா தருகின்றனர்... நம்மிடமிருந்து எடுத்த பணத்தைத் தானே திருப்பித் தருகின்றனர்...' என்ற எண்ணத்தை, பல அரசியல் தலைவர்களும், ஊடகங்களும் மக்கள் மனதில் விதைத்ததால், வேட்பாளர் கொடுத்த பணத்தை மறுக்காமல் வாங்கிக் கொண்ட மக்கள், பணத்துக்கு, "பட்டை நாமம்' போட்டுவிட்டு, தங்களின் விருப்பப்படியே ஓட்டுப் போட்டதன் மூலம், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். ஜனநாயகத்தை பணநாயகத்தால் ஜெயிக்க முடியும் என்ற எண்ணம், இந்த தேர்தல் மூலம் தவிடுபொடியாக்கப் பட்டுள்ளது.
திங்கள், 18 ஏப்ரல், 2011
காத்திருக்கும் கடமைகள்
திங்கள், 11 ஏப்ரல், 2011
ஓட்டு போடுங்க
யோசித்து வாக்களித்தால் நன்று'
சனி, 9 ஏப்ரல், 2011
இலவசமின்றிஆட்சியைபிடிக்கவழி
மானியங்கள் உதவியுடன் தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்களால் உண்மையில் பயன் உள்ளதா என் கேள்வி எழுந்துள்ளது. 2008 - 09 நிதியாண்டு பட்ஜெட்டில் 18 ஆயிரத்து 956 கோடி ரூபாயை நலத்திட்டங்களுக்கு செலவு செய்துள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. இது ஆண்டு மொத்த வருவாயில் 35 சதவீதம். நடப்பாண்டு பட்ஜெட்டில் மூலதன செலவிற்காக 9 ஆயிரத்து 140 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. இது மொத்த வருவாயில் 17 சதவீதம். இதே போன்ற திட்டங்களுக்கு 2009 - 10 நிதி ஆண்டில் 20 ஆயிரத்து 55 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. இது இந்த ஆண்டு வரவில் 37 சதவீதம். இதில் சில திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் சலுகைகளாக வழங்கப்பட்டுள்ளன.
* இலவச மின்சார மானியம் - ரூ.295 கோடி
* அரசு காப்பீட்டு மானியம் - ரூ.750 கோடி
* இலவச கலர் "டிவி' வழங்குதல் - ரூ.500 கோடி
* பொது வினியோக உணவு மானியம் - ரூ.3,750 கோடி
* வீட்டு வசதி - குடிசை மாற்று வாரியம் - ரூ.1,800 கோடி
* சமத்துவபுரம் - ரூ.75 கோடி
* வீடு கட்ட மானியம் - ரூ.262 கோடி
* இலவச காஸ் அடுப்பு திட்டம் ரூ.140 கோடி
* வேலையில்லாதோர் இலவச மானியம் - ரூ.60 கோடி
மொத்த மானியம் - ரூ.7,632 கோடி
மொத்த வருவாயில் 14 சதவீதம் இலவச திட்டங்களுக்கு மானியமாக ஒதுக்க பட்டுள்ளது. இதற்கு மேல் அரசு வாங்கிய கடன்களுக்கு வட்டி மூலம் 6 ஆயிரத்து 704 கோடி ரூபாய் செலுத்த வேண்டி உள்ளது. மொத்த நிதி பற்றாக்குறையான 12 ஆயிரத்து 860.45 கோடியில் மூலதன ஒதுக்கீடுக்கான செலவு 8 ஆயிரத்து 609.12 கோடியை கழித்தாலும், நிதி பற்றாக்குறை மட்டுமே 5 ஆயிரத்து 19.54 கோடி ரூபாய் இருக்கும். மொத்த இலவச மானியங்களுக்கு ஒதுக்கப்பட்ட 7 ஆயிரத்து 632 கோடி ரூபாயை தவிர்த்து பார்த்தால், அரசுக்கு உபரி நிதியே கிடைக்கக் கூடும். இதை வைத்தே இந்த மானியங்கள் பயனுள்ள திட்டங்களா இல்லையா என்பதை அறியலாம்.
இலவச "டிவி' திட்டம், மக்கள் வேலை செய்யும் காலத்தை குறைக்கிறதே தவிர, திறமையை வெளிக்காட்ட வழி செய்யவில்லை. சில கேபிள் ஆபரேட்டர்கள் மட்டுமே பயன் அடைகின்றனர். இதற்கான மின் தேவையும் அதிகரிக்கும். இலவச காப்பீட்டு திட்டத்தின் மூலம் 165 கோடி ரூபாய் மதிப்பிலான சிகிச்சையை மக்கள் பெற்றனர். ஆனால் அரசு 750 கோடி ரூபாய் பிரிமிய தொகை செலுத்த நிதி ஒதுக்கி உள்ளது. அதாவது நான்கரை மடங்கு அதிக பிரிமியம் செலுத்தி இத்திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது. இதனால் காப்பீட்டு நிறுவனத்துக்கு தான் வருமானம். இதற்கு பதில் பொது மருத்துவமனைகளை விரிவுபடுத்தி எல்லா வகையான உயர் சிகிச்சை வசதிகளையும் நிரந்தரமாக கிடைக்கச் செய்யலாம்.
வேலை இல்லாதவர்களுக்கு உதவி தொகை மானியம் என்று 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதனால் வேலைக்கு போக முயற்சிக்காமல், கையெழுத்திட்டு பணம் பெறும் சோம்பேறித்தனம் உருவாகி விட்டது. நியாய விலைக் கடைகள் மூலம் ஒரு ரூபாய்க்கு அரிசி கிடைப்பதால் வேலைக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் போகும். இதனால் நாட்டின் உற்பத்தி பாதிக்கும். தற்போதைய நிலையில் சாதாரண வேலைக்கு ஆட்கள் கிடைப்பதே கடினமாக உள்ளது. எப்படியும் வேலையை முடிக்க வேண்டும் என்போர் கூடுதலாக கூலியை கொடுத்து முடிக்க முற்படுவர். இதனால் மேலும் பொருட்கள் விலை கூடும். இப்படி, மானியத்தை கொடுக்கும் கொள்கைகளை விட்டு, அடிப்படை தேவைகளான, குடிநீர், மருத்துவம், போக்குவரத்து, சாலை, மின் உற்பத்தி போன்ற அத்தியாவசிய தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்தால், இலவசங்கள் கொடுக்காமலே அந்த அரசு ஆட்சியை பிடிக்க முடியும். கட்சிகள் சிந்திக்க வேண்டும். வரும் காலங்களில் அரசுகள் அவ்வாறு அமைந்தால், மக்கள் புண்ணியம் செய்தவர்கள்.thankyoudinamalar
வெள்ளி, 18 மார்ச், 2011
அசால்ட் வேண்டாம்
யாரோ எவரோ ரகசியமாய் ?
மொபைல் கேமிராக்கள், கையடக்க வீடியோ கேமிராக்கள் இன்றைக்குபெண்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப் படுகிறதுஎன்பதை இக்கட்டுரையில் காண்போம்.
குறிப்பாக தன் கணவன் மற்றும் வீட்டில் உள்ள ஆண்கள்வெளிநாடுகளில் இருக்க தனியாக வெளியிடங்களுக்கு செல்லக்கூடிய, தனியான தமது காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய நிலையில் உள்ள சமுதாயப் பெண்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கவே, பெண்களின் மத்தியில் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பொது இடங்களில் காமிராக்கள் :
பொது இடங்களில் குறிப்பாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்க்கெட் போன்ற பொது இடங்களில் வரும் பெண்களை மொபைல் காமிராக்கள் மூலம் படமெடுத்து இன்டர்நெட்டில் வைத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் பெருகி வருகிறது. ஆடை விலகிய நிலையில் பல குடும்பப் பெண்களின் படங்கள், வீடியோக்களை இன்டர்நெட்டில் வெளியிட்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.
ஹிஜாப் அணியும் பெண்கள் இது பற்றி கவலைப்பட வேண்டாம் என்றாலும். பர்தா அணியாமல் வெளியே செல்லும் பெண்கள் இது பற்றியவிழிப்புணர்வு பெற்றுக் கொண்டு தங்கள் ஆடைகள் சரியாக இருக்கிறதா என்று கவனம் வைத்துக் கொள்வது நல்லது.
பள்ளி, கல்லூரி, விடுதிகளில் :
பள்ளி, கல்லூரி, விடுதிகளில் தங்கும் மாணவிகள் அவர்களின் அறைகளில், மற்றும் கழிவறை, குளியலறைகளில் காமிராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதில் கவனம்செலுத்தவும். சக மாணவர்கள் தங்களை காமிராக்களால் படமெடுத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் இன்று சகஜமாக நடந்து வருகிறது. கவனமாக எப்பவும் விழிப்புணர்வுடன் இருக்கவும்.
பொதுக்கழிப்பிடங்கள், குளியலறைகள், ஹோட்டல் அறைகள் :
பொதுக் கழிப்பிடங்களுக்கு செல்லும் பெண்கள், பொதுக் குளியலறைகளை பயன்படுத்தும் பெண்கள் மற்றும் வெளியூர்களுக்கு செல்லும்போது வேலை நிமித்தமாக அங்கு ஹோட்டல்கள், லாட்ஜ்களில் தங்க நேரிடும்போது அங்குள்ள அறைகளை பயன்படுத்தும் போதும், கழிப்பறை, குளியலறைகளிலும் காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்று நன்றாக கவனித்துப் பார்க்கவும். தங்களுக்கு தெரியாமல் தங்களை, தங்கள் செயல்களை படமெடுக்கும் காமிராக்கள் அங்கு பொருத்தப் பட்டிருக்கலாம் கவனம் தேவை.
மருத்துவமனைகள் (ஆஸ்பத்திரிகளில்) கவனம் தேவை :
மருத்துவமனைகளுக்கு செல்லும் பெண்கள் தனியாக செல்லாதீர்கள். தக்க துணையுடன் செல்வது நல்லது. மருத்துவமனைகளிலும் தங்கள் ஆடைகளை நெகிழ்த்தும் போதும், ஆடைகளை மருத்துவ காரணங்களுக்காக ஆடைகளை விலக்கும் போதும் கவனமாக இருங்கள். காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்பதை கவனித்து உறுதி செய்து கொள்ளுங்கள், மருத்துவமனைகளில் டெஸ்ட்டுக்கு என்று எதாவது மருந்துகளை உட்கொள்ள சொல்லும் போதும் கவனம் தேவை உடனிருப்பவர்கள் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.
இப்படித்தான் ஒரு மருத்துவர் தன் மருத்துவமனைக்கு கால்வலி என்று வந்த குடும்பப் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து தனி அறைக்கு எடுத்துப் போய் அவர்களின் கற்பையும் சூறையாடி மானபங்கம் செய்து அவர்களை ஆடையின்றி படமெடுத்து, வீடியோவாகவும், புகைப்படமாகவும் இன்டர்நெட்டில் விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தான்.
இன்றைக்கு அந்த குடும்பப் பெண்களின் அலங்கோல புகைப்படங்கள், வீடியோக்கள் இன்டர்நெட்டில் வலம் வருவதை யாராலும் தடுக்க முடியவில்லை.
ஆகவே மருத்துவமனைகளுக்கு செல்லும் நமது பெண்கள் தக்கதுணையுடனும் சென்று அங்கு மிக்க கவனத்துடனும் இது பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.
துணிக்கடைகளின் உடை டெஸ்ட் செய்யும் அறைகளும் அங்குபொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடிகளும் :
நாம் துணிக்கடைகளுக்கு செல்வது இயல்பானது அங்கு உடைகளைப் போட்டு பார்த்து சரிபார்க்க சிறிய அறை பெண்களுக்காக பெரிய கடைகளில் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த துணிக்கடைகளின் உடைகளை போட்டு சரிபார்க்கும் அறைகளைப் பயன்படுத்தும்பெண்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும்.
ஏனென்றால் அங்கு கண்டிப்பாக கேமிராக்கள் தங்களை கண்காணிக்ப் பொறுத்தப் பட்டிருக்கும், வேறு நோக்கத்தில் இல்லை என்றாலும் துணிகள் களவு போகிறதா, துணிகளை மறைக்கிறார்களா என்று பார்ப்பதற்காகவாவது அங்கு கேமிராக்கள் பொருத்தப் பட்டிருக்கிறது
என்பதை கவனத்தில் கொண்டு தாங்கள் உடைகளை மாற்றவும். காமிராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை என்றாலும். கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும்.
இந்தகண்ணாடிகளிலும் இரண்டு வகை கண்ணாடிகள் உண்டு
இவைகளைகப்பற்றியும் நாம் தெரிந்து கொள்வது நல்லது. கண்ணாடிகளில் நம்மை மட்டுமே பிரதிபலிப்பது ஒரு வகை இன்னொரு வகை நாம் பார்க்கும்போது கண்ணாடியாக நம்மை பிரதிபலிக்கும். ஆனால் மறுபக்கத்திலிருந்து அதாவது கண்ணாடிக்கு அடுத்த பக்கம் பார்ப்பவர்களுக்கு ஒளிவு, மறைவு இல்லாமல் நம்மைக் காட்டும் இந்த இரண்டாம் வகை கண்ணாடிகள் பற்றிதான் நாம் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். இந்த உடை மாற்றும் அறைகளில் இந்த கண்ணாடிகளின் ஊடாக மறுபக்கம் காமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் அல்லது யாராவது தங்களை படமெடுக்கலாம் இவைகளை கவனத்தில் கொண்டு செயல்படவும்.
நம்மையறியாமலேயே நம்மை படமெடுத்து, வீடியோ எடுத்து மற்றவர்களுடன் இன்டர்நெட்டில் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் தற்போது மிக சாதாரணமாக நம் நாட்டிலும் பரவி வருகிறது.
-----------------------------------------------------------