சவுதி அரேபிய அரசு கொண்டு வந்துள்ள நிதாகத் எனப்படும் சட்டம் அங்கு பணியாற்றி வரும் இந்தியர்களை கலக்கமடையச் செய்துள்ளது. இந்த சட்டத்தின் அடிப்படையில், அங்கு பணிபுரியும் வெளிநாட்டு தொழிலாளர்கள் வெளியேற நாளையுடன் அவகாசம் முடிவடைய இருந்தது.
இந்நிலையில் மேலும் 4 மாத கால அவகாசம் அளித்து சவுதி அரேபிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சட்டம் தற்காலிகமாக 4 மாத காலத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், இது நடைமுறைக்கு வரும் பட்சத்தில், அங்கு வேலை செய்யும் இலட்சக்கணக்கான இந்தியர்கள் வேலையிழக்கும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது. சவூதி அரேபியாவில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் நோக்கில் லட்சக்கணக்கான வெளிநாட்டு தொழிலாளர்களை சவூதியிலிருந்து திருப்பி அனுப்ப சவூதி அரசு முடிவுசெய்துள்ளது