சனி, 18 ஜூன், 2011

புற்றுநோயை விரட்டும் காபி


எனக்குச் சாப்பாடு இல்லாவிட்டாலும் பரவாயில்லை. காபி இல்லாமல் இருக்க முடியாது என்று பெருமையாகச் சொல்லிக் கொள்பவரா நீங்கள்? நீங்கள் பெருமைப்படுவதற்கு கூடுதலாக இன்னொரு விஷயம் இப்போது கிடைத்துவிட்டது. காபி குடிப்பது மார்பகப் புற்றுநோய் வருவதைக் குறைத்துவிடுகிறதாம். ஸ்வீடனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரே வயதிலுள்ள பெண்களை வைத்து ஆராய்ச்சி செய்து பார்த்ததில் இது தெரிய வந்திருக்கிறது. காபி குடித்த பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் மிகக் குறைவாகவும், காபி அருந்தாத பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகள் அதிகம் இருப்பதையும் கண்டுபிடித்து இருக்கிறார்கள் அவர்கள். ஆனால் காபி குடிப்பது, எந்தவிதத்தில் பெண்களின் உடலில் செயல்பட்டு புற்றுநோய் வருவதைக் குறைக்கிறது என்பதை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. நீங்கள் காபி பிரியரா? இனிமேல் காலையில் எழுந்ததும் கண்களைத் திறக்காமலேயே காபியை ரசித்து அருந்தலாம்!