புதன், 30 ஜூன், 2010

கசப்பின் மகிமை

பாகற்காய் ஒரு சிறந்த நோய் நிவாரணி.

சர்க்கரை நோயாளிகள் எல்லோரும் எந்தத் தயக்கமும் இன்றி அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் காய்கறி பாகற்காய்தான்.எல்லோருக்கும் இது தெரிந்த விஷயமும் கூட. இதில் இயற்கையிலேயே இன்சுலின் நிறைந்துள்ளது. இது ரத்தம் மற்றும் சிறுநீரில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.

அதிகாலையில் வெறும் வயிற்றில், மூன்று முதல் நான்கு பழத்தைச் சாறு பிழிந்து சாப்பிட்டு வர, நன்கு குணம் கிடைக்கும். இதன் விதைகளைப் பொடி செய்து சாப்பாட்டோடு கலந்தும் சாப்பிடலாம். பாகற்காய் பெரும்பாலும் உடலுக்கு நல்லது என்று எல்லோருக்கும் தெரியும்.

ஆனால் அதன் கசப்புச் சுவைக்காக பலர் அதனை விரும்புவதில்லை. அவ்வாறு இல்லாமல், அறுசுவைகளில் நமது உடலுக்கு நல்லதைத் தரும் இந்த கசப்புச் சுவையிலான பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.பொதுவாக பாகற்காய் உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுக்கும். பாகற்காயில் இரண்டு வகைகள் உண்டு. பொடியாக இருக்கும் பாகற்காயை மிதி பாகற்காய் என்றும், நன்கு பெரிதாக நீளமாக இருப்பதை கொம்பு பாகற்காய் என்றும் அழைக்கிறார்கள்.

பாகற்காயை நாம் எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். புளியுடன் சேர்த்து பாகற்காயை சமைப்பது சிறந்தது என்று சொல்லப்படுகிறது. நீரிழிவு வியாதி உள்ளவர்கள் பாகற்காய் சாப்பிட்டால் மிகவும் நல்லது. அவர்கள் மட்டுமல்லாமல் ஜூரம், இருமல், இரைப்பு, மூலம், வயிற்றில் பூச்சித் தொல்லை இருப்பவர்களும் பாகற்காயை உண்ணலாம். இந்த பிரச்சினைகள் இருப்பவர்கள் மட்டும்தான் பாகற்காய் சாப்பிட வேண்டும் என்ற அவசியமில்லை. இது போன்ற பிரச்சினைகள் வர வேண்டாம் என்றால் எல்லோருமே சாப்பிடலாம்.

பாகற்காய் நமது நாவிக்குத் தான் கசப்பே தவிர உடலுக்கு இனிப்பானது. பாகற்காயை விட பாகற்காயின் இலையில் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன. அதன் சாறு பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. பாகற்காயின் இலைகளை அரைத்து உடல் முழுவதும் பத்துப்போட்டால் சிரங்கு ஒழிந்து விடும். இதேபோல பாகற்சாறும் உடலுக்கு மிகவும் ஏற்றது. ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு விதத்தில் பாகற்காய் இலையின் சாறைக் குடிக்க நோய் கட்டுப்படும்

சனி, 26 ஜூன், 2010

பழம் சாப்பிடுங்கள்

திராட்சைப் பழம்

வைட்டமின் சி மற்றும் தாது உப்புகளும் புளிப்பு சத்தும் கொண்ட திராட்சைப் பழம், பழவகைகளில் மிகவும் சிறந்தது. ரத்த அழுத்தம், ரத்த சோகைக்கு நல்ல மருந்தாகும். பித்தம் தணியும். கோடையில் ஏற்படும் உடல் வறட்சியை நீக்கும். மூளைக்கும் இருதயத்துக்கும் வலிமை தரும்.

கிர்ணிப் பழம்

கோடை காலத்தில் உடம்புக்குக் குளிர்ச்சியைத் தரும் பழங்களுள் கிர்ணிப் பழமும் ஒன்று. இந்தப் பழத்தில் எழுபத்தைந்து சதவீதம் தண்ணீர் உள்ளது. கிர்ணி பழத்துக்கு உள்ள தனிப் பெரும் சிறப்பு, கோடைக்கால கட்டிகளையும் பருக்களையும் இப் பழம் போக்கும்.

முந்திரிப் பழம்

கொட்டையை நீக்கிவிட்டு பழத்தை நறுக்கிச் சாறு பிழிந்து அதில் பாதியளவு சர்க்கரை கலந்து வெயிலில் வைக்க வேண்டும். அதன் அடியில் சுண்ணாம்பு வண்டல் அப்படியே படியும். அதை எடுத்துவிட்டு தெளிந்த சாறை வடிகட்டி குடித்தால் மிகவும் சுவையாக இருக்கும். எலும்புகளுக்கும் பற்களுக்கும் பலமளிக்கும்.

வெள்ளி, 25 ஜூன், 2010

திங்கள், 21 ஜூன், 2010

கல்வி




Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update

தங்கள் குழந்தைகள் புத்திசாலிகளாக ஆக வேண்டும் என்று எல்லா பெற்றோர்களும் விரும்புகிறார்கள். முதல் மார்க் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

இதற்காக குழந்தைகளுக்கு ஆர்வத்துடன் பாடம் சொல்லிக் கொடுப்பது, கூடுதல் நேரம் படிக்க வைப்பது, டிசன் அனுப்புவது, யோகா வகுப்பிற்கு செல்லச் சொல்வது, தியானம் செய்ய வலியுறுத்துவது, ஆரோக்கியமான உணவுகளை தயாரித்துக் கொடுப்பது என விதவிதமான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள்.

இவற்றைவிட வீட்டில் சிறு நூலகம் இருந்தாலே குழந்தைகளின் ஆர்வம் இயல்பாகவே கல்வியின் பக்கம் திரும்பிவிடும் என்கிறது புதிய ஆய்வு. அமெரிக்காவின் நெவேடா பல்கலைக்கழகம் இதை கண்டுபிடித்துள்ளது.

20 ஆண்டு காலம் இதற்கான ஆய்வு நடந்தது. அப்போது ஒரு வீட்டில் குறைந்தபட்சம் 500 புத்தகங்கள் இருப்பின் குழந்தைகளின் ஆர்வம் புத்தகத்தின் பக்கம் திரும்புவது தெளிவானது. இதன் முலம் பெற்றோர் சிறந்த கல்வியாளர்களாக இருந்தால்தான் பிள்ளைகளும் சிறப்பாக படிப்பார்கள் என்ற நம்பிக்கை மாறி உள்ளது.

3 வருடம் மட்டுமே படித்த பெற்றோர் மற்றும் 16 ஆண்டு காலம் படித்த பெற்றோர் இருவரது வீடுகளிலும் சிறு நூலகம் ஏற்படுத்தி ஆய்வு செய்தபோது குழந்தைகளின் கல்வியில் பெறும் மாறுதல்கள் காணப்பட்டது. அதாவது நூலகம் இருக்கும் வீடுகளில் குழந்தைகளின் 3 1/4 வயதிலேயே புத்தகங்களின் பக்கம் கவனம் திரும்புவது கண்டு பிடிக்கப்பட்டது. கல்வித்தரமும் சராசரியாக உயர்ந்தது

நன்றி- தினகரன்
-----------------------------------------------------------------
'கல்வி கற்பது முஸ்லிமான ஆணுக்கும் பெண்ணுக்கும் கட்டாயக் கடமை"
நபிகள் நாயகம்

ஞாயிறு, 20 ஜூன், 2010

தொலைபேசியும் இஸ்லாமியப் பெண்களும்

முஸ்லிம் பெற்றோர்களே, சகோதரர்களே! உங்கள் பெண் குழந்தைகளயும், நம் சகோதரிகளை நாம் பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும், கயவர் கூட்டத்தின் சதியை முறியடிப்பதும், நமது கடமையாக இருக்கின்றது. இதனை நாம் காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டும் தற்சமயம் அதிக அளவில் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆடவருடன் ஓடிப்போவதும், மதம் மாறுவதும் நிகழ்ந்து வருகின்றது.

இத‌ற்கான‌ முழுப்பொறுப்பையும் பெற்றோர் ஏற்க‌ வேண்டி இருக்கிற‌து.

இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணிகள்:

1. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை முறையாக கவணிக்க தவறுவது.

2. அளவிற்கு அதிகமாக பணம் கொடுப்பது. வசதி உள்ளது என்பதற்காக மொபைல் போன் போன்ற சாதனங்களை வாங்கி கொடுப்பது.

3. மொபைல் ஃபோனில் தங்கள் பெண் குழந்தைகள் யாருடன் பேசுகின்றார்கள், என்ன எஸ்.எம்.எஸ் வருகின்றது போன்றவற்றை கவணிக்காமல் இருப்பது.

4. பெண்கள் எங்கே செல்கின்றார்கள், எப்போது வருகின்றார்கள் என்பதை கவனிக்க அல்லது கண்டிக்க தவறுவது.

5. மார்க்கத்தை போதிக்காமல், காதல் படம், பாடல் போன்ற கேளிக்கைகளை சி.டி. வீடியோ என வீட்டிற்குள் அனுமதித்து வழிதவற வைப்பது.

6. பெண் குழந்தைகளை தனிமையில் வாழ அனுமதிப்பது. (உதாரனம். வீட்டில் தனி அறை, தனி படுக்கை என என்ன செய்தாலும் தெறியாதவாரு நாமே அவர்களுக்கு வசி செய்து கொடுப்பது)

7. வெளிநாட்டில் வாழும் இளைஞர்கள் தங்கள் மனைவியரை தனிக்குடித்தனம் வைப்பது அல்லது அவர்கள் இஸ்ட்டப்படி உரிய கண்கானிப்பின்றி வாழ அனுமதிப்பது.

8. அந்நிய ஆடவருடன் பழகும் சூழ்நிலைகளை ஏற்ப்படுத்தி கொடுப்பது. பெண்களை தனியாக ஜவுளி கடை, நகைக்கடை என மார்க்கெட்டிற்கு அனுப்புவது அங்கு அந்நிய ஆண்கள் இவர்களை பொருட்களை இலவசமாக கொடுத்து தங்கள் வசப்படுத்த உதவுகின்றது.

நமது பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்:

திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்:

‘இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும்”. (அல்குர்ஆண்: 24:37)

”நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விருப்பினால் (அந்நியருடம் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ அத்தகய)வன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள். (அல்குர்ஆண் 33:32)

1.அந்நிய ஆணுடன் பழகுவதும் ஹராம் (இறைவனால் தடுக்கப்பட்டுள்ளது) என்பதனை கண்டிப்புடன் கூறி அனுப்புங்கள். அந்நிய ஆண்களிடம் கண்டிப்புடன் இருக்கச் சொல்லுங்கள்.

2.ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் தான் இந்த சதி வேலை அதிகமாக நடக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

3.தனியாக செல்லும் மாணவிகளை கல்லூரிகளுக்கு முடிந்தவரை நாமே நமது சகோதரிகளை அழைத்துச் சென்று கல்லூரிகளில் விடுவது, திரும்ப அழைத்து வருவது மிகவும் நல்லது. பெற்றோர்கள் முக்கியமாக கல்லூரிகள், மற்றும் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பெண் குழந்தைகளின் வருகைப்பதிவு (அட்டன்டன்ஸ்) சரியாக உள்ளதா என வாரம் ஒருமுறை சரிபார்க்க வேண்டும்.

4.வெளிநாட்டிற்கு செல்லும் கணவன்மார்கள் பெரும்பாலும் தங்கள் இளம் மனைவியரை பெற்றோருடனோ அல்லது மனைவியின் பெற்றோருடனோ வாழ்வதற்கு விட்டுச் செல்வது நல்லது.

5.பெரும்பாலும் வீட்டில் உள்ள பெண்களுக்கு மொபைல் போன்களை வாங்கிக் கொடுக்க‌ வேண்டாம். லேன்ட் லைன் டெலிபோன் மட்டும் இருந்தால் போதுமானது.

6.வீட்டில் தனியாக உள்ள பெண்கள் தங்கள் தொலைபேசி எண்களை ஆட்டோ டிரைவர், கடைகாரர் என யாருக்கும் கொடுக்க வேண்டாம். எந்தச் சூழ்நிலையிலும் யாருக்கும் உங்கள் போன் நம்பரை கொடுக்க‌ வேண்டாம்.

7.தெறியாத எண்களிலிருந்து போன் வந்தாலோ அல்லது அந்நிய ஆடவர் யாராவது உங்களை ஈர்க்கும் வகையில், அல்லது உங்கள் உணர்வுகளை கிளர்ச்சி அடையச் செய்யும் வகையில் பேசினாலோ அல்லது மெஸேஜ் அனுப்பினாலோ உடனடியாக அந்த தொடர்பை துன்டியுங்கள். மீண்டும் பேசவோ அல்லது பதில் அளிக்கவோ முற்படாதீர்கள்.

ஏனென்றால் இதன் மூலமே அவர்கள் தங்கள் முதல் தொடர்பை ஆரம்பிக்கின்றார்கள். ஆகவே ஆரம்பத்திலேயே உங்கள் கணவர், தந்தை, அல்லது உறவினர்களன்றி யாரிடம் இருந்து அவசியமற்ற அழைப்புகளோ, மெஸேஜோ வந்தால் அவற்றிற்கு தயவு செய்து பதில் அளிக்காதீர்கள் அது எவ்வளவு கவர்ச்சியானதாக இருந்தாலும் சரியே.

8. கடைகளுக்கு செல்லும்போது உங்கள் கணவர்மர்களை பற்றியோ அல்லது குடும்படதினர் பற்றியோ கடையில் உள்ளவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காதீர்கள் மிகக் கண்டிப்புடன் இது உங்களுக்கு அவசியமற்றது என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லுங்கள். உங்கள் கணவர்மார்கள் வெளிநாட்டிலோ அல்லது வெளியூரிலோ இருக்கும் விசயத்தை அவசியமின்றி அந்நியர்களுக்கு சொல்லாதீர்கள் அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் சரியே.

9. கல்லூரி, பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மிகவும் உஷாராக இருப்பது நல்லது ஏனென்றால் நீங்கள் தான் இவர்களின் முதல் குறி, பார்ப்பதற்கு அப்பாவியாகவும், பாவமான தோற்றத்துடனும் உங்கள் மனதில் இரக்கத்தை ஏற்ப்படுத்தும் வகையிலும்தான் இவர்களின் முதல் அறிமுகம் இருக்கும். மிகவும் நல்லவன், பாவமாக உள்ளது என்று நீங்கள் சற்று இழகினால் போதும் உங்கள் அழிவை நோக்கிய பயனத்தை நீங்கள் துவங்கி விட்டிர்கள் என்று அர்த்தம்.

10. பெரும்பாலும் எந்த சக மாணவனிடமும் உங்கள் தொலை பேசி என்களை கொடுக்கதீர்கள், அதுபோல் சக மாணவியரால் நல்லவன் என அறிமுகப்படுத்தப்படும் யாரையும் நீங்கள் ஆண் நண்பர்களாக ஆக்கி கொள்ளாதீர்கள். பெரும்பாலும் இவர்கள் தங்கள் வலையில் வீழ்ந்த மற்ற பெண்கள் மூலமாகவே அடுத்த பெண்ணிற்கு தூன்டிலை வீசுகின்றார்கள் என்பதை நீங்கள் கவணத்தில் கொள்ள வேண்டும்.

11. தோழிகள் துணைக்கு வந்தாலும் கூட உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுடன் நீங்கள் வெளியே செல்வதோ, உணவருந்த செல்வதோ அவர்களுடன் பேசுவதோ வேண்டாம். உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுக்கும் உங்கள் தொலைபேசி எண்களை கொடுக்க வேண்டாம். ஏனென்றால் இங்கிருந்துதான் தொடர்புகள் ஆரம்பமாகின்றன.

12. உங்கள் தோழியர் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் கூட அவர்களின் செல்போன் மூலம் உங்களை படம் எடுப்பதை அனுமதிக்க வேண்டாம்.முக்கியமாக நீங்கள் தனிமையில் இருக்கும் பொதும் ஆடைகள் கவனமின்றி இருக்கும் போதும். அப்படி படமெடுப்பது தெறிந்தால் உடனடியாக அதை வாங்கி அழித்த விடுங்கள். இது போன்ற நிகழ்வுகளை உடனே பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும் தெறியப்படுத்துங்கள்.

13. முதன்மையாக ஆண்,பெண் இருவருடைய உள்ளத்திலும், செயலிலும் – இறையச்சம், ஈமான் இருக்க வேண்டும்.

14. பர்தா முறையை கட்டாயம் உபயோகப்படுத்துதல். முறையான‌ ஆபாசம் இல்லாத லூசான பர்தாக்களை அணியச் சொல்லுங்கள், பர்தா என்பது அழகை மறைப்பதற்கு டைட்டாகவும், செக்சியாகவும் அறைகுறை ஆடைகளை பர்தா என்ற பெயரில் அணிவது தங்கள் அழகை வியாபாரமாக்கவே செய்யும்.

15. வட்டிக்கு வாங்குவது. தவனை முறையில் வாங்குவது (பைனான்ஸ்) போன்வற்றை தவிருங்கள், இது போன்ற ஆண்களின் தொடர்பால் இலகுவாக பெண்கள் எப்படி பாலியல் பலாத்காரத்துக்கு உள்வாங்கப் பட்டு புளுபலிம் எடுக்கவும் பயன் படுத்தப்படுகின்றார்கள்.

அந்நியருடன் ஓடிப்போகும் அல்லது ஓடிப்போன பெண்களின் நிலை:

பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் மார்க்க ஞானமில்லாததாலும், தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காமுகனின் வார்த்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பையும், பெற்றோரையும், சகோதரர்களையும், உறவுகளையும் தீராத்துயரில் மூழ்கடித்துவிட்டு பயிற்றுவிக்கப்பட்ட காவிக் காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றாள்.

ஓடிப்போகும்போது இவள் தனது பெற்றோரின் ஓட்டுமொத்த சேமிப்பையும் நகைகளையும் எடுத்து வருமாறு தூண்டப்படுகின்றாள். இவள் கொண்டு சென்ற செல்வமும் இவளின் இளமையும் தீரம் வரை இவளை அனுபவித்து விட்டு சக்கையாக இவள் தூக்கி வீசப்படுகின்றாள்.

இறுதியல் இளமையும், செல்வமும் அனுபவிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட இவள் வீட்டிற்கும் வர முடியாமல், எங்கும் செல்ல முடியாமல் இறுதியில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியாகிறாள் அல்லது தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொள்கின்றாள். இவள் நம்பிச் சென்ற காமுகன் தனது அடுத்த பணியினை தொடாந்தவனாக அடுத்த இளம்பெண்னை மயக்கும் வேலையில் கவனமாகின்றான்.ஆனால் இந்த அயோக்கியர்களை நம்பி உற்றார் உறவினர்களை துறந்து சென்ற பெண்னின் இறுதி நிலை உலகிலும் நரகம், மறுமையிலும் நரகம்.

பெற்றேர்களே, கணவன்மார்களே, நீங்களும் சற்று சிந்திப்பீர், வெள்ளம் கரைகடந்தபின் கதறாமல், இப்போதே அனைபோட திட்டமிடுவீர், உங்கள் பெண்பிள்ளைகளை கண்கானியுங்கள்

لا إله إلا انت سبحانك إني كنت من الظالمين

இஸ்லாமிய தமிழ் தஃவா கமிட்டி
<<<<>>>>
அல்கோபர் சவூதி அரேபியா

** ** ** ** ** ** ** ** ** **
رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا
எங்கள் இறைவனே!
நீ உன்னிடமிருந்து எமக்கு அருளை வழங்கி,
எமது காரியத்தில் நேர்வழியை
எமக்கு எளிதாக்கி தந்தருள்வாயாக! அல்குர்ஆன்:18:10

** ** ** ** ** ** ** ** ** **
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்

வியாழன், 17 ஜூன், 2010

வெட்கம்





புதன், 16 ஜூன், 2010

ஹஜ்

பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி கடிதம் எழுதி உள்ளார். அதன் விவரம் வருமாறு:-

இந்தியாவில் உள்ள மாநில ஹஜ் கமிட்டிகள் மூலமாக சவுதி அரேபியாவில் உள்ள இரண்டு புனித தலங்களான மெக்கா, மதினாவுக்கு இந்த ஆண்டு செல்லும் 1 லட்சத்து 16 ஆயிரம் ஹஜ் பயணிகள் தங்குவதற்கு தேவையான வாடகை கட்டிடம் இன்னமும் தேர்வு செய்யப்படாமல் உள்ளது.

இதனால் இந்திய ஹஜ் பயணிகள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாவார்கள். புனித தலங்களுக்கு வெகு தொலைவில் அல்லது பழைய கட்டிடங்களிலே அவர்கள் தங்க நேரிடும். இதற்கு தீர்வுகாண உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் பெரிய பிரச்சினை ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, ஹஜ் பயணிகள் தங்குவதற்கு தகுதியான வாடகை கட்டிடத்தை போர்க்கால அடிப்படையில் தேர்வு செய்யும்படி இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

Jasmine is state first in SSLC Class X exam

திங்கள், 14 ஜூன், 2010

தூர்ந்து கிடக்கும் வீராணத்தின் துணை ஏரிகள்

கடலூர் மாவட்டத்தில் வீராணத்தின் துணை ஏரிகளாக உருவாக்கப்பட்டவை வாலாஜா, பெருமாள் ஏரிகள். மழை இல்லாத காலத்திலும், கொள்ளிடத்தில் வீணாகும் காவிரி நீரைப் பயன்படுத்தும் வகையில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், வீராணம் ஏரி, சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு, வாலாஜா மற்றும் பெருமாள் ஏரிகளுக்குக் காவிரி நீர் கிடைக்கும் வகையில், 1936-ல் கொள்ளிடம் கீழணை கட்டப்பட்டது.
வீராணம் ஏரி நிரம்பியதும் நீர் வீணாகாமல் இருக்க, சேத்தியாத்தோப்பு அணைக்கட்டுக்கும் வாலாஜா, பெருமாள் ஏரிகளுக்கும் உபரி நீர் செல்லும் வகையில், வீராணம் ஆயக்கட்டு முறை உருவாக்கப்பட்டு இருப்பது அற்புதமான நீர்ப்பாசன முறையாக அமைந்து உள்ளது. சென்னைக்குக் குடிநீர் கொண்டு செல்வதால் மட்டுமே, வீராணம் ஏரி பற்றி விவசாயிகள் பேசுவது அரசின் காதுகளில் விழுகிறது. அதனால் வீராணம் ஏரியை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கைளில், நூறில் ஒன்றாகிலும் நிறைவேறுகிறது. ஆனால் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு, வாலாஜா ஏரி, பெருமாள் ஏரி பற்றிய கோரிக்கைகளை தமிழக அரசு, தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருவதாகவே விவசாயிகள் கூறுகிறார்கள்.
வாலாஜா ஏரி 15 ஆயிரம் ஏக்கர், பெருமாள் ஏரி 10 ஆயிரம் ஏக்கர் பாசனப் பரப்பளவைக் கொண்டவை. இந்த இரு ஏரிகளையும் 12 கி.மீ. நீளம் உள்ள நடுப்பரவனாறு இணைக்கிறது. பராமரிப்பு இன்மையால் கடந்த 50 ஆண்டுகளில் 10 அடி உயரத்துக்கு மண் மேடிட்டு, வாலாஜா ஏரி முற்றிலும் தூர்ந்து, தற்போது ஒரு வாய்க்கால்போல் காட்சி அளிக்கிறது. பெருமாள் ஏரி விரைவில் தூர்ந்து விடும் அபாயம் உள்ளது. என்.எல்.சி. சுரங்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் நீர், வாரத்தில் 3 நாள்கள் பெருமாள் ஏரிக்கும், 4 நாள்கள் வாலாஜா ஏரிக்கும் விடப்படுகிறது. சுரங்க நீரைச் சுத்திகரிக்காமல் விடுவதால், அதில் உள்ள கரித்துகள்கள் மற்றும் கழிமண், படிந்து, இரு ஏரிகளும் தூர்ந்து வருவதாக விவசாயிகள் கூறுகிறார்கள். எனினும் சுரங்க நீர் இந்த இரு ஏரிகளின் பாசனத் தேவையில் 25 சதவீதத்தைக் கூடப் பூர்த்தி செய்வதில்லை என்கிறார்கள்.
முப்போகம் விளையும் 30 ஆயிரம் நிலங்கள் நிச்சயமற்ற குறுவை சாகுபடிக்கும், நிச்சயமற்ற காலம் கடந்த சம்பா சாகுபடிக்கும் தள்ளப்பட்டுவிட்டது. இரு ஏரிகளும் தூர்வாரப்பட்டு, பரவனாற்றின் கரைகளைச் சீரமைத்து, வடகிழக்குப் பருவமழை காலத்தில் முறையாக உபரிநீர் கடலுக்குள் வழியும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தால், 30 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் முப்போகம் நெல் விளையும் என்கிறார்கள் விவசாயிகள்.
இதுகுறித்து பெருமாள் ஏரி பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் சண்முகம் கூறுகையில்,
"50 ஆண்டுகளில் வாலாஜா ஏரி முற்றிலும் தூர்ந்து விட்டது. பெருமாள் ஏரி தூர்ந்து கொண்டு இருக்கிறது. இதனால் வடகிழக்குப் பருவமழை காலத்தில் கிடைக்கும் நீரைச் சேமிக்க முடியவில்லை. வழிந்தோடும் உபரி நீரும் விரைவில் கடலில் கலக்காததால் 20 கிராமங்களைச் சேர்ந்த 30 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள், செப்டம்பர் முதல் டிசம்பர் வரை வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. பாதிப்புகளுக்கு நிவாரணமாக ஆண்டுதோறும் ரூ.15 கோடியை அள்ளி வீசுகிறது தமிழக அரசு. ஆனால் நிரந்தரத் தீர்வுக்கு வழிகாணவில்லை. பரவனாற்று நீர் எளிதில் வடிய, ரூ.5 கோடியில் அறிவிக்கப்பட்ட அருவாமூக்குத் திட்டம் அறிமுக நிலையிலும், வாலாஜா ஏரியை ரு.25 கோடியில் தூர்வாரும் திட்டம், என்.எல்.சி. நிறுவனத்தின் அறிவிப்பு நிலையிலும் உள்ளது. பெருமாள் ஏரியைத் தூர்வார திட்டம் தயாரிக்கப்படுவதாக பல்லாண்டுகளாகத் தெரிவிக்கிறார்கள்' என்றார்.
நன்றி-லால்பேட்டை எக்ஸ்பிரஸ்

வியாழன், 10 ஜூன், 2010

மறக்க முடியா நிகழ்ச்சி

வாழ்வில் எத்தனையோ மனிதர்களை சந்திக்கிறோம், ஆனால் அவர்களில் சிலர் மட்டுமே மனதில் நிற்கின்றனர். எத்தனையோ நூல்களைப் படிக்கிறோம். ஆனால் அவற்றில் சில நூல்கள் மட்டுமே நினைவில் நிற்கின்றன. அது போல் நம் வாழ்வில் எத்தனையோ நிகழ்ச்சிகள் நடக்கின்றன, ஆனால் அவற்றில் சில நிகழ்ச்சிகள் வாழ்வில் மறக்க முடியா நிகழ்ச்சிகளாக மனதில் பதிந்து போகின்றன.

அவ்விதம் ஆழ் மனதில் பதிந்து போன மறக்க முடியா நிகழ்ச்சிகளை மறுபடியும் அசை போட்டுப் பார்த்தால் என்ன? என்று எண்ணியதன் விளைவு தான் இக்கட்டுரை. சந்தேகமில்லாமல் இது முழுக்க முழுக்க சுய புராணம் தான். ஆனாலும் சுவையான சுய புராணம்.

மறக்க முடியா நிகழ்ச்சி-2

எமது வெளியீடான 'புண்ணிய பூமிக்கு ஒரு புனிதப் பயணம்' நூலைப் படித்துப் பார்த்த எமது நண்பர் கொள்ளுமேடு முஹம்மது தாஹா அவர்கள் இந்நூலை இவ்வருடம் புனித ஹஜ்ஜுப் பயணம் மேற்கொள்ள விருக்கும் தமது தாயார் உறவினர்களிடம் வாழ்த்தி வழியனுப்பி வைக்க வருமாறு அழைக்கும் போது ஒவ்வொருவருக்கும் ஒரு பிரதி வழங்க விரும்புவதாக தமது விருப்பத்தைத் தெரிவித்தார்.

அவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க நூலின் பிரதிகளை அவர் வீட்டில் கொண்டு போய் சேர்க்க நானே நேரில் சென்ற போது நண்பர் முஹம்மது தாஹா அவர்களின் மூத்த சகோதரர் முஹம்மது ஜக்கரியா அவர்கள் எம்மை வரவேற்று அன்புடன் உபசரித்தார்.

வழக்கமான சுக விசாரித்தலுக்குப்பின் எமது நூலைப் பற்றிய பேச்சு எழுந்தது. 'தாங்கள் தான் அப்துஸ்ஸலாம் மஸ்தூக்காவா? அப்படியானால் தங்கள் சொந்த ஊர்?' என அவர் கேட்டு முடிக்கு முன் நான் 'திருப்பந்துருத்தி' என்று சொல்ல, தாங்கள் தான் 'திருப்பந்துருத்தி மஸ்தூக்காவா?' என்று கேட்டு ஆச்சர்யத்தில் அவர் கண்கள் அகல விரிந்தன.

சற்று பொறுங்கள் என் என்னிடம் கூறிவிட்டு அவர் தன் தாயாரை அழைத்து, 'அம்மா! நீங்கள் பலரிடமும் அடிக்கடி படித்துக் காட்டுவீர்களே! அந்தக் கடிதத்தை எடுத்து வாருங்கள்' என்று கேட்டுக் கொள்ள உடனே அவரின் தாயார் ஒரு கடித உறையைக் கொண்டு வந்துக் கொடுத்தார். அந்தக் கடித உறையை என்னிடம் கொடுத்த சகோதரர் ஜக்கரியா அவர்கள் 'கடிதத்தைப் பிரித்துப் படித்துப் பாருங்கள்' என என்னிடம் கேட்டுக் கொண்டதற் கிணங்க நான் அக்கடிதத்தைப் பிரத்துப் படித்துப் பார்த்தேன். இப்போது ஆச்சர்யத்தில் அகல விரிந்தது அவர் கண்களல்ல என் கண்கள்.

கடிதத்தில் இடப்பட்டிருந்த தேதி 1987 ஆம் வருடம் எழுதிய கடிதம் அது என்று அடையாளம் காட்டியது. சகோதரர் ஜக்கரியா அவர்கள் சவூதியில் இருந்த போது புனித ஹஜ்ஜை நிறைவேற்றி விட்டு வந்து தனது பயண அனுபவங்களை ஒரு நீண்ட கட்டுரையாக தன் தாயாருக்கு அப்போது எழுதிய கடிதம் அது.

புனித ஹஜ்ஜில் தாம் கண்ட காட்சிகளை வர்ணனையாக எழுதி இந்தக் கட்டுரைக்கான கருத்து உதவி 'திருப்பந்துருத்தி அப்துஸ் ஸலாம் மஸ்தூக்கா' என்று நன்றியுடன் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். கடிதத்தின் இறுதி வரிகளைப் படித்தபோது எனக்கு மெய் சிலிர்த்தது. இந்த சிலிர்ப்பு அல்லாஹ்வின் மீது ஆணையாக கர்வத்தில் அல்ல.

நான் ஒரு அறிஞனுமல்ல, புகழ் பெற்ற எழுத்தாளனுமல்ல, இஸ்லாமிய எழுத்துலகில் நான் இன்னும் அரிச்சுவடி கூடப் படிக்காதவன். அப்படியிருக்க பெருமையும் கர்வமும் எங்கிருந்து வரும்?

இருபது வருடங்களுக்கு முன் நான் எழுதிய ஹஜ் பயணக் கட்டுரை நூல், எங்கோ ஒரு மூலையில் எனக்கு முன் பின் அறிமுகமில்லாத ஒரு முஸ்லிம் சகோதரருக்கு, அதுவும் புனித ஹஜ்ஜை நிறை வேற்றும் வழிகாட்டியாகப் பயன் பட்டிருக்கிறதே! அல் ஹம்து லில்லாஹ். அந்த ஹஜ்ஜில் எனக்காகவும் அவர் துஆச் செய்திருப்பார் அல்லவா? அது போதும் எனக்கு.

மிக அருமையாக ஹஜ்ஜின் அனுபவங்களை தன் தாய்க்கு கடிதமாக எழுதிய அந்தச் சதோதரர், தான் பெருமைப் பட்டுக் கொள்ளாமல் மிகவும் நன்றியுடன் எனது பெயரை அக்கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறாரே அவர் உயர்ந்தவர்.

தனது அன்பு மகன் எழுதிய அருமைக் கடிதத்தை இருபது வருடங்களாகப் பாதுகாத்து எல்லோரிடமும் படித்துக் காட்டிப் பெருமைப் பட்டுக் கொண்டிருக்கிறாரே அந்தத் தாய் உயர்ந்தவர்.

தனது தாயை வழியனுப்பி வைக்க வருகை தரும் அனைத்து உறவினர்களுக்கும் புனித ஹஜ்ஜின் மகத்துவத்தைப் புரியவைக்கும் புத்தகத்தை வழங்கி வித்தியாசமான முறையில் வழியனுப்பிவைக்கும் அந்தப் புனிதத் தாயின் நன்மக்கள் உயர்ந்தவர்கள்.

அனு தினமும் தவறாது தொழுது அழுது மன்றாடிய முறையீட்டை ஏற்று புனித ஹஜ்ஜை நிறைவேற்றும் பெரும் பேற்றை அந்த நன்மக்களின் தாய்க்கு வழங்கிய அல்லாஹ் அனைவரையும் விட மிக மிக உயர்ந்தவன்.
நன்றி- அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா

புதன், 9 ஜூன், 2010

அன்புடன் வரவேற்கிறோம்

இறைவனின் திருப் பெயரால்.......
எமது புதிய வலைப்பதிவுக்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்
அன்புடன் தாமு
ரஃபா மன்ஸில்
தாயிஃப் நகர்
கொள்ளுமேடு