தங்கள் குழந்தைகள் புத்திசாலிகளாக ஆக வேண்டும் என்று எல்லா பெற்றோர்களும் விரும்புகிறார்கள். முதல் மார்க் வாங்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
இதற்காக குழந்தைகளுக்கு ஆர்வத்துடன் பாடம் சொல்லிக் கொடுப்பது, கூடுதல் நேரம் படிக்க வைப்பது, டிசன் அனுப்புவது, யோகா வகுப்பிற்கு செல்லச் சொல்வது, தியானம் செய்ய வலியுறுத்துவது, ஆரோக்கியமான உணவுகளை தயாரித்துக் கொடுப்பது என விதவிதமான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள்.
இவற்றைவிட வீட்டில் சிறு நூலகம் இருந்தாலே குழந்தைகளின் ஆர்வம் இயல்பாகவே கல்வியின் பக்கம் திரும்பிவிடும் என்கிறது புதிய ஆய்வு. அமெரிக்காவின் நெவேடா பல்கலைக்கழகம் இதை கண்டுபிடித்துள்ளது.
20 ஆண்டு காலம் இதற்கான ஆய்வு நடந்தது. அப்போது ஒரு வீட்டில் குறைந்தபட்சம் 500 புத்தகங்கள் இருப்பின் குழந்தைகளின் ஆர்வம் புத்தகத்தின் பக்கம் திரும்புவது தெளிவானது. இதன் முலம் பெற்றோர் சிறந்த கல்வியாளர்களாக இருந்தால்தான் பிள்ளைகளும் சிறப்பாக படிப்பார்கள் என்ற நம்பிக்கை மாறி உள்ளது.
3 வருடம் மட்டுமே படித்த பெற்றோர் மற்றும் 16 ஆண்டு காலம் படித்த பெற்றோர் இருவரது வீடுகளிலும் சிறு நூலகம் ஏற்படுத்தி ஆய்வு செய்தபோது குழந்தைகளின் கல்வியில் பெறும் மாறுதல்கள் காணப்பட்டது. அதாவது நூலகம் இருக்கும் வீடுகளில் குழந்தைகளின் 3 1/4 வயதிலேயே புத்தகங்களின் பக்கம் கவனம் திரும்புவது கண்டு பிடிக்கப்பட்டது. கல்வித்தரமும் சராசரியாக உயர்ந்தது
நன்றி- தினகரன்
-----------------------------------------------------------------
'கல்வி கற்பது முஸ்லிமான ஆணுக்கும் பெண்ணுக்கும் கட்டாயக் கடமை"
நபிகள் நாயகம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக