மழைக் காலத்தை எதிர் நோக்கி, தன் பேரன் பேத்திகளுக்கு தின்னக் கொடுப்பதற் காக தட்டை, முறுக்கு போன்ற பலகாரங்களை செய்து கொண்டிருந்தாள் பாட்டி.
மழைக்காலத்தில் அரையும் குறையுமாகச் சாப்பிட்டுவிட்டு பள்ளிக்கூடத்துக்குப் போகும் பிள்ளைகள், சாயங்காலம் வாடிப்போய் வரும்போது அவர்களுக்கு கட்டாயம் ஏதாவது சாப்பிடக் கொடுக்க வேண்டும் என்பதில் பாட்டி உறுதியாய் இருப்பாள்.
அடைமழை தொடங்கிவிட்டாலே, தவறாமல் அதற்கான நொறுக்குத் தீனிகளை அவள் கைப்படவே தயாரிக்கத் தொடங்கி விடுவாள்.
அச்சுப் பிசகாமல் அடுப்பில் ஊற்றி எடுத்து முறுக்குகளை எடுத்து டப்பாக்களுக்குள் அடுக்கிக் கொண்டிருக்கும்போது அம்புஜம் தன் 5 வயது குழந்தையுடன் வந்து அமர்ந்தாள்.
என்னடியம்மா.. ரொம்பநாளாவே ஆளையே இந்தப் பக்கம் பாக்க முடியல... என்ன பண்ணிக்கிட்டு இருக்கே.. என்று பாட்டி உபச்சாரமாகக் கேட்டு வைத்தாள்.
என்னபாட்டி பண்ணுறது.. ஓயாத வேல... அதோட இந்தக்குட்டிய மேய்க்கிறதே பெரிய வேலையா போச்சு... அதுமில்லாம இதுக்கு சும்மா சும்மா உடம்புக்கு ஏதாச்சும் வந்துடுது.. ஓயாம நகம் கடிக்கிறா பாட்டி.. நானும் எவ்வளவோ தடுத்துப் பாத்துட்டேன்.. ஆனா முடியல பாட்டி...
அதுக்கு என்ன பண்ணுறதுன்னு சொல்லு பாட்டி...
மேல மருந்து தடவுறது தற்காலிக வைத்தியம்தான்.. நிரந்தரமா அந்த பழக்கம் நிக்கணும்னா வயித்துல இருக்குற கிருமிய வெளியேத்தணும். வயித்துல கிருமி இருக்குற குழந்தைகள்தான் நகத்தக் கடிக்கும். தூங்குறப்போ அரைக்கண் மூடித் தூங்கும். முகம் எப்போதும் வாடிப்போயி வெளிறியே இருக்கும். குழந்த ஏதோ சிந்தனையிலேயே இருக்கும். பதட்டமா இருக்கும்.
இது எல்லாமே வயித்துல இருக்குற கிருமிக படுத்துற பாடுதான்.
அதனால கிருமிய வெளியேத்திட்டா குழந்த நல்லாயிடுவா கவலபடாத...
இப்ப நாஞ்சொல்றத கவனமா கேட்டுக்க
இஞ்சி -1 துண்டு,
முருங்கைப்பட்டை- 1 துண்டு
எடுத்து ரெண்டையும் இடிச்சி நல்லா சாறு எடுத்து அந்த சாறோட கொஞ்சம் வெற்றிலை சாறையும், தேனையும் அளவாக் கலந்து 10 நாளுக்கு ஒருதடவ மாதத்துல மூணு தடவை ஒரு வேளைக்கு குடு. இப்பிடி மூணு மாசம் குடுத்துக்கிட்டு வா. வயித்துல இருக்குற பூச்சியெல்லாம் தானா வெளியேறிடும்.
பாட்டி சொன்ன மருந்தைக் கேட்டுக் கொண்ட அம்புஜம், பாட்டிக்கு நன்றி சொல்லிவிட்டு அவசர அவசரமாக முருங்கை மரத்தைத் தேடி புறப்பட்டாள்.
பாட்டி வைத்தியமே பக்குவமான வைத்தியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக