சிறப்பு வலைப்பதிவுகள்
சனி, 22 ஜூன், 2013
செவ்வாய், 26 பிப்ரவரி, 2013
truth
ASSALAMU ALAIKUM..........................
“திருக்குர்ஆன் வசனத்தை நிருபிக்கும் 16 ஆயிரம் அடி உயரமுடைய மலையின் மேல் உள் ஒரு கப்பல்” ”பூமியே!உனது தண்ணீரை நீ உறிஞ்சிக் கொள்! வானமே நீ நிறுத்து!” என்று (இறைவனால்) கூறப்பட்டது. தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது. “அநீதி இழைத்த கூட்டத்தினர் (இறையருளை விட்டும்) தூரமாயினர்” எனவும் கூறப்பட்டது .(திருக்குர்ஆன் 11:44.) இதில் சான்று உள்ளது.அவர்களில் அதிகமானோர் நம்பிக்கை கொள்வதில்லை” (திருக்குர்ஆன்26:121.).“
அவரையும், கப்பலில் இருந்தோரையும் காப்பாற்றினோம்.இதை அகிலத்தாருக்குச் சான்றாக்கினோம்” (திருக்குர்ஆன் 29:15.)” பலகைகள் மற்றும் ஆணிகள் உடைய (கப்பல்) ஒன்றில் அவரை ஏற்றினோம்.அது நமது கண்காணிப்பில் ஓடியது. இது (தன் சமுதாயத்தால்) மறுக்கப்பட்டவருக்கு (நூஹுக்கு) உரிய கூலி. அதைச் சான்றாக விட்டு வைத்தோம். படிப்பினை பெறுவோர் உண்டா? “.
(திருக்குர்ஆன்54:13-15.)
இவ்வசனங்களில் நூஹ் நபியின் கப்பலை அத்தாட்சியாக மலையின் மேல் விட்டு வைத்திருப்பதாக திருக்குர்ஆன் கூறுகின்றது.மலை போன்ற உயரத்திற்கு வெள்ளம் வந்ததால் ஜூதி மலைக்கு மேல் கப்பல் நிலை கொண்டது.இம்மலை துருக்கி நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது. துருக்கி நாட்டைச் சேர்ந்த போதான் மாவட்டத்திலுள்ள அரராத் என்ற மலைதான் ஜூதி மலை என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருமலையேறும் குழு அம்மலையை ஆய்வு செய்து பனிப் பாறைகளுக்கு அடியில் கப்பல் துண்டுகள் இருந்ததைக் கண்டு பிடித்துள்ளது.1969 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 2 ஆம் திகதி யன்று கிழக்குத் துருக்கியின் ரஷ்ய எல்லையில் அமைந்துள்ள அரராத் மலைத் தொடரில் ஒரு கப்பலின் சில மரப் பகுதிகளை அந்த ஆராய்ச்சிக்குழு கண்டுபிடித்தது.இம்மலைத் தொடரின் மேற்குப்பகுதியில், 16,000 அடி உயரத்தில் பனியால் மூடப்பட்ட பாறைகளுக்கிடையே 20 மீட்டர் ஆழத்தில், அக்கப்பலின் மரப் பலகைகள் புதைந்து கிடந்தன. 16 ஆயிரம் அடி உயரமுடைய மலையின் மேல் ஒரு கப்பல் நிலை கொண்டுள்ளது என்றால் அந்த அளவுக்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்.அதன் காரணமாக அந்த மலைக்கும் மேலே கப்பல் மிதந்து கொண்டு இருக்கும் போது வெள்ளம் வடிந்திருக்க வேண்டும். இதனால் அந்தக் கப்பல் மலையின் மீது நிலை கொண்டிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் ஊகித்துச் சொல்வதை திருக்குர்ஆன்1430 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி விட்டது.மலையின் மேலே கப்பலைக் கொண்டு போய் வைத்தது யார்? என்ற கேள்விக்குத் திருக்குர்ஆன் மட்டுமே தக்க விடை கூறுகிறது. ‘அக்கப்பலை அத்தாட்சியாக விட்டு வைத்திருக்கிறோம் ; சிந்திப்பவர் உண்டா?’என்று கூறி, சமீபத்தில் 40 ஆண்டுகளுக்கு முன் கண்டு பிடிக்கப்பட்ட இந்த உண்மையை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் முன்னறிவிப்பு செய்துள்ளது .திருக்குர்ஆன்,“இறைவனின் வேதம்”என்பதற்கு இது சான்றாகவுள்ளது.இந்த சம்பவங்கள் மூலம் இஸ்லாம் எவ்வாறான மார்க்கம் என்றும் இஸ்லாம் மட்டுமே உண்மையான மார்க்கம் என்றும் அறிய முடிகிறது

சனி, 18 ஆகஸ்ட், 2012
செவ்வாய், 10 ஏப்ரல், 2012
பொன்
தங்கமடி தங்கம்
பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது; இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்; அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு.
ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக (அவர்களுடைய) பாதிரிகளிலும்,சந்நியாசிகளிலும் அநேகர் மக்களின் சொத்துக்களைத் தவறான முறையில் சாப்பிடுகிறார்கள்; மேலும் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுக்கிறார்கள்; இன்னும் எவர்கள் பொன்னையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ; (நபியே!) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனை உண்டு என்று நன்மாராயம் கூறுவீராக!.
திருக்குர்ஆன்
மறுமை நாளில் இறை மறுப்பாளன் (விசாரணைக்காகக்) கொண்டுவரப்பட்டு 'உனக்கு பூமி நிரம்பத் தங்கம் சொந்தமாக இருந்தால் நீ அவற்றைப் பிணைத் தொகையாகத் தர(வும் அதன் மூலம் நரக வேதனையிலிருந்து விடுதலை பெறவும்) நீ முன்வருவாயல்லவா?' என்று அவனிடம் கேட்கப்படும். அதற்கு அவன் 'ஆம்' என்று பதிலளிப்பான். அப்போது 'இதைவிட சுலபமான ஒன்றே (-அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காமலிருப்பதையே) உன்னிடம் கோரப்பட்டிருந்தது. (ஆனால், அதை நீ ஏற்கவில்லை)' என்று கூறப்படும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறி வந்தார்கள்.
அனஸ் இப்னு மாலிக்(ரலி)
நபிகள் நாயகம் ஸல் அவர்கள்
தங்கம் மென்மையான உலோகம்ஆதலால் சுத்தத் தங்கத்தில் செய்யப்பட்ட நகை உறுதியாக இருக்காது. தங்கத்துடன் ஒரு குறிப்பிட்ட அளவு அல்லது வெள்ளி செம்புயைக் கலந்து செய்யப்பட்ட நகை ,நாணயம், பாத்திரம் முதலியவை உறுதியாக இருக்கும். தங்க பாத்திரங்கள் மட்டுமின்றி பேனாமுள், கைக்கடிகார உறுப்புகள்ஆகியவையும் தங்கத்தால் செய்யப்படுகின்றன. இன்றைய நகை ஆசாரிகள் நகை செய்ய வசதியாக இருக்குமேன்பதர்காக காட்மியம் உலோகத்தையும் சிறிதளவு சேர்கிறார்கள் .வைன் அல்லது சாராயத்தில் சிறிதளவு அரைத்து பொடியாக்கிப் பருகுவர் . இதனை தங்கபஸ்பம் என்று கூறுவார் . தங்கபஸ்பம் பருகினால் மேனி பொலிவடையும் என்பது பலரது நம்பிக்கை.தங்கத்தை மறு பயன்பாடு செய்ய முடியும். இவை அன்றைய சந்தை விலைக்கேற்ப மதிப்பிடப்படுகின்றன. எனவே தங்கம் ஒரு சிறந்த முதலீடாக கருதப்படுகிறது. உலகிலேயே அதிகமான தங்கம் கையிருப்பு வைத்திருக்கும் நாடு அமெரிக்கா.
ஒவ்வொரு நாட்டின் நாணயச் செலாவணியிலும் (பண மதிப்பு) தங்கம் பெரும்பங்கு வகிக்கிறது. அந்த்தந்த நாட்டின் செலாவணியை குறிப்பிட்ட எடையளவு தங்கத்திற்கு மதிப்பிடுவார்கள். ஒவ்வொரு நாடும் அதன் மத்திய வங்கி ( ரிசர்வ் வங்கி) யில் தங்கத்தை கையிருப்பில் வைத்திருக்கும். இவ்வாறு இருப்பு வைத்துள்ள தங்கத்தினுடைய மதிப்பிற்கு ஏற்றாவாறு அந்த நாட்டு அரசாங்கம் செலாவணி அல்லதுநாணயம் அல்லது ரூபாய் நோட்டுகளை வெளியிடுகிறது. தங்க இருப்பை வைத்தே ஒரு நாட்டின் நாணய மதிப்புகணக்கிடப்படுகிறது.
தங்கத்தின் '''காரட்''' என்ற அலகால் மதிப்பிடப்படுகிறது. 24காரட் என்பது சுத்தத் தங்கமாகும். இதில் ஆபரணங்கள் செய்ய முடியாது. 22 காரட் முதல் 9 காரட் வரை தங்க நகைகள் செய்யப்படுகின்றன. 22காரட் தங்கம் என்பது 91.6 சதவீதம் தங்கமும் 8.4 சதவீதம் செம்பு, வெள்ளி போன்ற மற்ற உலோகமும் கலந்ததாகும். 18 காரட் என்பது 75 சதவீதம் தங்கமும், 14 காரட் என்பது 58.5 சதம் தங்கமும், 9 காரட் என்பது 37.5 சதவீதம் தங்கமும் கலந்ததாகும். சேர்க்கப்படும் உலோகங்களுக்கேற்ப தஙத்தின் மதிப்பு கிடைக்கிறது. 22காரட்டில் செய்யும் தங்க நகைகள் எளிதில் சேதம் அடையக்கூடியவை. காரட் குறையக் குறைய தங்க நகைகளின் தன்மை கெட்டியாகவும் உறுதியுடனும் இருக்கும்.
WIKIPEDIA
சீனாவில் தூக்கியெறிக்கப்பட்ட 100 மில்லியன் மொபைல்போன்களிலிருந்து 1,500 கிலோ தங்கம், 1 மில்லியன் கிலோ அளவிற்கு தாமிரம், 30 ஆயிரம் கிலோ அளவிற்கு வெள்ளி உள்ளிட்டவைகள் பிரித்து எடுக்கப்பட்டுள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை என்கிறது சீனா.
இது குறித்து, சீனாவிலிருந்து வெளிவரும் பீபிள்ஸ் டெய்லி பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் 400 மில்லியன் அளவிற்கு மொபைல்போன்கள் தூக்கி வீசப்படுவதாகவும், சீனாவில் மட்டும் 100 மில்லியன் மொபைல்போன்கள் தூக்கியெறிக்கப்படுகின்றன.
இதன்மூலம், சீனாவில் மட்டும் 150 கிராம் தங்கம், 100 கிலோ காப்பர் மற்றும் 3 கிலோ சில்வர் பிரித் தெடுக்கப் பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
வியாழன், 9 பிப்ரவரி, 2012
ஹதிஸ்
சிரமத்துடன் இலகுவும் இருக்கின்றது.
இறைவன் எந்த மனிதரையும் அவரது சக்திக்கு அதிகமாக சிரமப்படுத்துவது இல்லை. சிரமத்திற்குப் பின்னர்
இலகுவை இறைவன் உண்டாக்குவான்.உண்மையில் சிரமத்துடன் இலகுவும் இருக்கின்றது.
ஒரு பொருள் உங்களுக்கு நன்மையாக இருக்கும் நிலையில் அதனை நீங்கள் வெறுக்கக்கூடும். மேலும், ஒரு பொருள் உங்களுக்குத் தீமையாக இருக்கும் நிலையில் அதனை நீங்கள் விரும்பக் கூடும். (இவற்றை) இறைவன் நன்கு அறிகிறான். ஆனால், நீங்கள் அறிவதில்லை.
இறைவன் உங்களை உங்கள் அன்னையரின் வயிற்றிலிருந்து வெளிக்கொணர்ந்தான்; நீங்கள் ஏதும் அறியாத நிலையில்! மேலும், செவிப்புலன்களையும், பார்வைப் புலன்களையும், சிந்திக்கும் இதயங்களையும் உங்களுக்கு வழங்கினான். நீங்கள் நன்றி செலுத்தக் கூடியவர்களாய்த் திகழவேண்டும் என்பதற்காக!
எந்தப் பொருளில் மானக்கேடான தன்மை பொதிந்துள்ளதோ அது அதனைப் பாழ்படுத்தி விடுகின்றது. எந்தப்பொருளில் நாணம் உள்ளதோ அது அதனை ஒளிரச் செய்கிறது
வெள்ளி, 30 டிசம்பர், 2011
புயல்
புயலுக்கு பெயர் வைக்கும் முறை : தானே புயல் பெயர் வந்தது எப்படி?
சர்வதேச வானிலை ஆய்வு
நிறுவனம், கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் சூட்டுவதை
ஒழுங்குப்படுத்தியது. அதன்படி ஒவ்வொரு பிராந்தியத்திலும் நாடுகள்
ஒன்றிணைந்து புயல்களுக்கு பெயர் வைக்கும் முறை ஏற்படுத்தப்பட்டது. அந்த
வகையில் வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் புயல்களுக்கு இந்திய
பிராந்தியத்தில் உள்ள நாடுகள் ஒன்று சேர்ந்து பெயர் வைக்க
தீர்மானிக்கப்பட்டது.
இந்த பிராந்தியத்தில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர், ஏமன், தாய்லாந்து ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. வங்கக்கடல், அரபிக்கடலில் உருவாகும் புயல்களுக்கு என்ன பெயர் வைக்கலாம் என்பதை இந்த 8 நாடுகளும் பட்டியலாக தயாரித்து கொடுத்துள்ளன. அந்த பட்டியலில் உள்ள பெயர்கள்தான் ஒவ்வொன்றாக புயல்களுக்கு சூட்டப்படுகின்றன. கடந்த 2004ம் ஆண்டு முதல் வங்கக்கடல் புயல்களுக்கு இப்படி பெயர் சூட்டப்பட்டுட வருகின்றன.
கடந்த ஆண்டு 5 தடவை புயல் ஏற்பட்டது. அந்த புயல்களுக்கு பட்டியலில் உள்ள வரிசைப்படி லைலா, பந்து, பெட், கிரி, ஜல் என்று பெயரிடப்பட்டன. இதில் லைலா பெயரை பாகிஸ்தான், பந்து பெயரை இலங்கை, பெட் பெயரை இந்தியா தேர்வு செய்து கொடுத்திருந்தன. இதில் லைலை, ஜல் இரு புயல்களும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தின. 2011ம் ஆண்டு நடப்பு சீசனில் கடந்த அக்டோபர் மாதம்தான் முதல் புயல் தோன்றியது. அந்த புயலுக்கு மாலத்தீவு நாடு தேர்வு செய்து கொடுத்திருந்த கெய்லா என்ற பெயர் சூட்டப்பட்டது. இதையடுத்து இந்த ஆண்டு இரண்டாவதாக தற்போதைய புயல் தமிழ்நாட்டை குறிவைத்து வந்து கொண்டிருக்கிறது.
இந்த புயலுக்கு பட்டியலில் உள்ள பெயர்களில் இருந்து தானே என்ற பெயர் தேர்வு செய்து சூட்டப்பட்டுள்ளது. இந்த தானே பெயரை வழங்கியது மியான்மர் நாடாகும். மியான்மர் நாட்டின் ஜோதிடவியல் நிபுணர் மின் தானே கா பெயரை குறிப்பிடும் வகையில் இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த வரிசையில் அடுத்து வரும் புயல்களுக்கு முர்ஜன் (ஏமன்), நீலம் (பாகிஸ்தான்), மகசென் (இலங்கை), பைலின் (தாய்லாந்து), ஹெலன் (வங்கதேசம்), லெகர் (இந்தியா) என்று பெயர்கள் சூட்டப்பட உள்ளன
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)